குறைந்த கட்டணத்தில் பேருந்தில் பயணம் செய்ய இப்படியும் ஒரு வாய்ப்பா.? போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு

Published : Sep 13, 2025, 08:51 AM IST

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) பொதுமக்களின் பயணச் செலவைக் குறைக்கும் வகையில் புதிய மாதாந்திர பாஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.1000 மற்றும் ரூ.2000 மதிப்புள்ள இரண்டு வகையான பாஸ்கள் மூலம் வரம்பற்ற பயணம் மேற்கொள்ளலாம்.

PREV
14
தமிழக அரசு பேருந்து

தமிழக அரசு சார்பாக இயக்கப்படும் பேருந்து பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அந்த வகையில்,குறைந்த கட்டணத்தில் பல இடங்களுக்கு செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் வகையில் பல மடங்கு கட்டணம் குறைவாக உள்ளது. மேலும் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் விடியல் பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள் மாதம் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 2ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

24
மாதாந்திர பயண அட்டை

இந்த பேருந்துகளில் வகுப்பை பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. இந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய சூப்பர் சான்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆயிரம் மற்றும் 2000 ரூபாய் மாதாந்திர பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

34
பேருந்தில் வரம்பற்ற பயணம்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) பொதுமக்களின் பயணச் செலவைக் குறைக்கும் வகையில், புதிய மாதாந்திர பாஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. பல்வேறு சேவைகளில் பயன்படுத்தக்கூடிய இந்த பாஸ், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 1000 மாதாந்திர பாஸ் : அனைத்து MTC பேருந்துகளிலும் (ஏ.சி. பேருந்துகள், வில்லேஜ் சேவைகள், சாட்லைட் சேவைகள் தவிர) வரம்பற்ற பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
பட்ஜெட்டில் மிச்சமாகும் பணம்

இதே போல 2000 மாதாந்திர பாஸ் மூலம் ஏ.சி. பேருந்துகள் உட்பட, அனைத்து MTC பேருந்துகளிலும் வரம்பற்ற பயண வசதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ் பெற விரும்பும் பொதுமக்கள், https://mtcbus.tn.gov.in/Home/travelasyou/11 என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். மேலும் QR Code-ஐ ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

மாநகரப் போக்குவரத்து கழகத்தின் இந்த புதிய முயற்சி மூலம், பயணிகள் சிரமமின்றி மற்றும் செலவு குறைந்து தங்கள் தினசரி பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த திட்டம் சென்னையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories