அடுத்த 3 மணிநேரம் உஷார்! சென்னை மட்டுமல்ல இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை!

Published : Sep 13, 2025, 08:36 AM IST

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

PREV
15
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறதுது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

25
கனமழை

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேயிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

35
லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

45
7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

55
செங்கல்பட்டில் மழை

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், இடைக்கழிநாடு ஆகிய பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வது போல மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories