பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லாமலே வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மின்சாரம் இல்லாம் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை.
24
துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
34
மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான லிஸ்ட் வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹரேயம்மன் கோயில் தெரு, வண்ணந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அபிராஞ்சி அவென்யூ, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் 7 முதல் 13வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 1வது பிரதான சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.