
நாட்டின் 15வது குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணப்பத்திரத்தை வாசிக்க அதனை ஏற்று வழிமொழிந்த சி.பி.ராதாகிருஷ்ணன், “சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்னும் நான்” என்று தான் பிறந்த கிராமத்தின் பெயரையும் உச்சரித்து பதவியேற்றுக்கொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வன்முறைக்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு வருகை தரவுள்ளார். சுராசந்த்பூர் மற்றும் இம்பாலில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, மக்களைச் சந்திப்பார். எதிர்க்கட்சிகள் இதை 'தாமதமானது' என விமர்சிக்கின்றன. ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். இம்பாலில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து, ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார்.
Pothys: போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் சென்னை ஈசிஆர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் தமிழக அரசு பேருந்தை ஓடிசா இளைஞர் திருடிச்சென்றார். அந்த பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் மாநிலம் காண்ட்லாவில் இருந்து மும்பைக்கு 75 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் பாம்பார்டியர் Q400 விமானம் புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தின் சக்கரம் ஒன்று தனியாக கழண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்த விமானம் மும்பைக்கு தனது பயணத்தை தொடர்ந்து பத்திரமாக தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளப்பதிவுகளில் அண்ணாமலை திமுக ஆதரவுடன் வாங்கிய சொத்துக்களின் விவரப் பட்டியல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை, "நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் மனித தொண்டையில் புதிய உறுப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். புதிய புற்றுநோய் ஸ்கேனிங் பரிசோதனைகளை மேற்கொண்டபோது, தொண்டையின் மேல் பகுதியில் ஆழமாக இருக்கும் சில சுரப்பிகளை அவர்கள் தற்செயலாக கண்டறிந்தனர்.
ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ததை அடுத்து, சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார். Gen Z குழுவான "வி நேபாளிக் குழு" நாடாளுமன்றத்தைக் கலைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு, போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 'இன்விக்டஸ் கேம்ஸ் ஃபவுண்டேஷன்' குழுவுடன் அவர் கீவ் நகருக்கு வந்து, உக்ரைன் பிரதமர் மற்றும் வீரர்களை சந்தித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், “வெறும் 2 சீட்டுக்காக திமுக.வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நான் பெரியாரைப் படித்தவன் என்பதால் என்னை சாதி தலைவர் என்று சொல்கின்றனர். பெரியாரைப் படித்தவன் என்பதால் நான் திமுகவை ஆதரிக்கின்றேன். திமுக.விடம் அந்த ஓரிரு சீட்டுகளை கூட வாங்க முடியாத நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றார்.