Diwali Holiday: பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை.
தமிழகத்தில் விடுமுறை என்ற செய்தியை கேட்டாலே பள்ளி மாணவர்களுக்கு அளவில்லாத குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த மாதம் முழுவதும் வார விடுமுறை தவிர கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவில்லை. அதுவும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை வந்துவிட்டதால் பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதாவது ஜூன் மாதத்தில் பார்த்தால் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.
25
ஜூலை மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை
அடுத்தாக வந்த ஜூலை மாதமும் மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஜூலை மாதத்தில் பொது விடுமுறை என்று பார்த்தால் மொஹரம் பண்டிகை அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்று மொத்தமாக பார்த்தால் ஜூலை மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
35
செப்டம்பர் மாதம்
இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் குஷியான மாதமாக பள்ளி மாணவர்களுக்கு அமைந்தது. அதாவது சுதந்திர தின விழா, கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 4 நாட்கள் கூடுதலாக விடுமுறை நாட்களாக அமைந்தது. தொடர் விடுமுறையும் கிடைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். அதாவது அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படகிறது. அதற்கு மறுநாள் நோன்பு கொண்டாடுபவர்கள். பொதுவாக தீபாவளி அன்று மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவித்து வருகிறது.
55
4 நாட்கள் தொடர் விடுமுறை
இந்நிலையில் அக்டோபர் 21ம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் வார விடுமுறையை சேர்ந்து மொத்தம் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் இப்போதே பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.