MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • செங்கோட்டையனுக்கு பின்னால் 11 அதிமுக மாஜி அமைச்சர்கள்..! பாஜகவின் அசைண்மெண்ட்.. வெடி வைக்கும் வேலுமணி..!

செங்கோட்டையனுக்கு பின்னால் 11 அதிமுக மாஜி அமைச்சர்கள்..! பாஜகவின் அசைண்மெண்ட்.. வெடி வைக்கும் வேலுமணி..!

யாராவது தங்களது அசைன்மென்ட்க்கு கட்டுப்படவில்லை, ஒத்துப் போகவில்லை என்றால் அந்த இன்னொருவரை வைத்து அவர்களை சரிகட்டவும் இப்படி ஹோல்டில் சிலரை வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் டெல்லி ஆடுகின்ற கேம் தான் என்கிறார்கள். 

4 Min read
Thiraviya raj
Published : Sep 12 2025, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் உறுதியாக அடுத்தடுத்த நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார். இதற்கு பின்னணியில் முக்கியமான சில அதிமுகவை மாஜி அமைச்சர்கள் செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘‘நீங்க துணிஞ்சு இறங்குங்கண்ணா.. நாங்க இருக்கோம்’’ என வலுவாக சப்போர்ட் செய்து வருவதாகவும் அதை ஒட்டியேதான் செங்கோட்டையனும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை போய் பார்த்துவிட்டு வந்து இருக்கிறார். இதில் மிக முக்கியமான ஒருவர் முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி என்கிறார்கள் செங்கோட்டையனுடன் இருக்கும் நெருக்கமானவர்கள்.

தனது ஆதரவாளர்களிடம், ‘‘நம்ம பக்கம் எல்லாரும் இருக்காங்க. நாம டலைமை பொறுப்புக்கு வந்துவிடலாம். இங்கே மேற்கு மண்டலத்திலேயே கொங்கு பகுதிதான் நமக்கான, அதிமுகவுக்கான வாக்கு வங்கி. வேலுமணி டீம்ல சப்போர்ட் நமக்கு இருக்கிறது’’ என தங்களது ஆதரவாளர்களிடம் தெரிவித்து வருகிறது செங்கோட்டையன் டீம். விசாரத்ததில் செங்கோட்டையனுக்கு எஸ்.பி.வேலுமனியின் மறைமுக ஆதரவு இருப்பதும் உண்மை என்கிரது கள நிலவரம். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமானவராக வேலுமணி இருந்தார். கொங்கு பங்கு, அத்துடன் பாஜகவின் ஆதரவு என இப்படி பல விஷயங்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருந்தார் எஸ்.பி.வேலுமணி.

25
Image Credit : Asianet News

ஆனால் பிறகு எஸ்.பி வேலுமணியின் அபாரமான அந்த வளர்ச்சி மத்தியில் இருக்கக்கூடிய பலருடனான நெருக்கமான நட்பு, அடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் அவருக்கு இருக்கிற நெருக்கம் என முக்கியமானவராக மாறி விட்டார் எஸ்.பி.வேலுமணி. அவரது பவர் எல்லாமே தன்னுடைய முகத்துக்கு போட்டியாக இங்கு வந்து விடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு சந்தேகம் ஏற்பட இரு தரப்புக்கும் இடையில ஒரு சின்ன பனிப்போர் தொடங்கியது.

அது கொஞ்சம் கொஞ்சமாக பெருதாகிக் கொண்டே இருந்தது. ஆனாலும் கடநணந நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பணிமனையே திறக்கவில்லை எனபல விமர்சனங்கள் வந்தது. அதனால் தான் அதிமுக அங்கு மூன்றாவது இடத்திற்கும் போனது. பாஜகவின் தமிழ்நாடு தலைவராக அப்போதிருந்த இருந்த அண்ணாமலையின் தீவிர பரப்புரை இரண்டாவது இடத்துக்கும் பாஜகவை கொண்டு வந்தது. சிங்கை ராமச்சந்திரன் எம்பி வேட்பாளராக இருந்தார். அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்றெல்லாம் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. எஸ்.பி. வேலுமணி டீம் ஒத்துழைக்கவில்லை எனவும் பேசப்பட்டது. அடுத்து பொள்ளாச்சி தொகுதியை எடுத்துக்கொண்டால் எம்பி தொகுதியில் வேலுமணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வருகிறது.

Related Articles

Related image1
ஜெயலலிதா இறந்த இரவு நடந்தது என்ன..? எடப்பாடி மகாத்மா காந்தி அல்ல..! உண்மையை உடைத்த திருநாவுக்கரசர்..!
35
Image Credit : Asianet News

அங்கு சுமார் 1000 வாக்குகள் மட்டும்தான் பாஜகவை விட அதிமுக முன்னிலை பெற்றது. 57,927 வாக்குகளை அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் பெற்றார். அதே நேரத்தில் 56 ஆயிரத்து 817 வாக்குகளை பாஜகவின் வசந்த ராஜன் பெற்றார். அதாவது பாஜக சுமார் 1000 வாக்குகள் மட்டும்தான் அதிமுகவைவிட குறைந்து இருந்தது. தன்னுடைய சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியிலேயே பாஜக எந்த அளவுக்கு வாக்குகள் பெற்று இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? எஸ்.பி.வேலுமணி பாஜகவின் பாச வளையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் அர்த்தம் எனக் கூறி வணந்ார்கள் அதிமுகவினர். அதிமுகவில் இருந்தாலும் கூடுதலாக பாஜகவுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார் எஸ்.பி.வேலுமணி என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த புள்ளியில்தான் இப்போது செங்கோட்டையன் கலக குரல்களை எழுப்பி கொண்டு இருக்க்கும் செங்கோட்டையனுக்கும் பக்கபலமாக எஸ்.பி.வேலுமணி இருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர். எம்எல்ஏவான மகேந்திரனுடைய மகளுக்கும் செங்கோட்டையினுடைய பேரனுக்கும் கடந்தாண்டு திருமண நடைபெற்றது. இந்த திருமணம் நடைபெற முக்கிய காரணமாகவும், பக்கபலமாகவும் இருந்தது எஸ்.பி.வேலுமணி என்கிறார்கள்.

அடுத்து எடப்பாடி பழனிசாமியுடன், செங்கோட்டையன் உச்சகட்ட பனி போரில் இருக்கிறார் என்று தெரிந்தும்கூட தனது மகன் திருமணம், திருமண வரவேற்பு ஆகிய இரண்டுக்குமே வற்புறுத்தி செங்கோட்டையின பங்கேற்க வைத்தார் வேலுமணி. இது மட்டுமா? கோவை வடக்கு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அம்மன் அர்ஜுனனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இவர் வேலுமணியின் அதி தீவிரமான ஆதரவாளர். அப்போது அவருக்காக ஓடோடி வந்து குரல் கொடுத்தவர் செங்கோட்டையன். ஒரு பக்கம் எடப்பாடிக்கு நிழல் போல இருந்தாலும், மறுபக்கம் அவருக்கு எதிராக காய் நகர்த்துபவர்களுக்கும் ஆதரவாக பக்க பலமாகவும் இருக்கிறார் என்கிற விமர்சனமும் எஸ்.பி.வேலுமணி என்கிறார்கள்.

45
Image Credit : Asianet News

செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்ட அந்த மாவட்ட செயலாளர் தற்காலிகமாக பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிற மேட்டுப்பாளையம் எம்எல்ஏவான ஏ.கே.செல்வராஜ் வேலுமணியின் தீவிர ஆதரவாளர். இப்படி தனிப்பட்ட வகையில் தமிழ்நாடு முழுக்கவே ஆதரவாளர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் வேலுமணி. அவருக்கு பின்னால் பாஜகவும் பக்கபலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தனது கலகக் குரலை ஓங்கி ஒலித்து, டெல்லி வரை சென்று பார்ப்பதற்கான அனைத்து ரூட்டுகளையும் போட்டுக் கொடுத்தவராகவும் எஸ்.பி வேலுமணி இருக்கிறார் என ஒட்டுமொத்த பின்னணிகளையும் போட்டு உடைக்கிறார்கள் மேற்கு மண்டலத்தில் இருக்கும் முக்கியமான ரத்தத்தின் ரத்தங்கள்.

அப்படியானால் கொங்கு மண்டலத்தில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவா குரல் கொடுக்கவில்லையே என ஒரு கேள்வி எழுகிறது. செங்கோட்டையை வலுவாக தனது கருத்துக்களை செப்டம்பர் 5ஆம் தேதி வலுவாக வைக்கவில்லை. அடுத்து பாஜக தான் வலிமைப்படுத்த வேண்டும் என டெல்லிக்குசென்றேன் என அவர் பேசியதை அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பவில்லை. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு முன்பைவிட இன்னும் அதிகமாகவே தொண்டர்கள் கூட்டம் கூடுகிறார்கள். இது எல்லாமே எடப்பாடிக்குதான் அதிமுகவின் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதால் செங்கோட்டையன் குரல் எழுப்பினாலும், அது வெறும் ஒரு ஸ்பார்க் மாதிரி தான் இருந்ததே ஒழிய, அது முழுமையாக எரிமலையாக வெடிக்கவில்லை. அதனால் அந்த 11 அதிமுக மாஜிக்களும் கொஞ்சம் அப்படியே அமைதியாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.

55
Image Credit : Asianet News

எஸ்.பி.வேலுமணியின் ஆதார்வாளர்களோ பலரும், ‘‘கட்சிக்கு முழுமையான விசுவாசத்தோடு பொதுச் செயலாளருக்கு முழுமையான விசுவாசத்தோடு எஸ்.பி வேலுமணி அண்ணா இருக்காரு. ஆனா புரிஞ்சுக்கோங்க என்றைக்கும் தலைமைக்கு எதிராக அவர் இருக்கவே மாட்டார்’’ என அடித்துச் சொல்கிறார்கள். பாஜகவை பொறுத்த வரை அதிமுக உள்ளே சலசலப்புகள் வந்தால் அதை வைத்து லாபக் கணக்கு போடுகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொருத்தரையும் தனக்கு நெருக்கமாகவும் வைத்துக் கொள்கிறார்கள். யாராவது தங்களது அசைன்மென்ட்க்கு கட்டுப்படவில்லை, ஒத்துப் போகவில்லை என்றால் அந்த இன்னொருவரை வைத்து அவர்களை சரிகட்டவும் இப்படி ஹோல்டில் சிலரை வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் டெல்லி ஆடுகின்ற கேம் தான்’’ என்கிறார்கள் அதிமுகவில் நடக்கும் விஷயங்களை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள்.

About the Author

TR
Thiraviya raj
எஸ். பி. வேலுமணி
செங்கோட்டையன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved