தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் தொடங்கியுள்ளது. 454 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர்.
ஆசிரியர்கள் தான் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளனர். எனவே ஆசிரியர்கள் இல்லையென்றால் மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக செழிக்காது. எனவே மாணவர்கள் நல்ல நிலைக்கு செல்ல ஆசிரியர்களின் கண்டிப்பு, வாழ்க்கைக்கு ஏற்ற பாடங்கள் தான் முக்கியமானது. எனவே தமிழகத்தில் அரசு பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன.
தற்போது வரை தமிழகத்தில் சுமார் 36,000 அரசு பள்ளிகள் உள்ளன, இதில் கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது
24
புதிதாக 2346 ஆசிரியர்கள் பணி நியமனம்
அதே நேரம் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. எனவே 2025 ஜூலை இறுதிக்குள் 2,346 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் பல இடங்கள் காலியாக உள்ளதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து ஒரு சில மாவட்டங்களில் கூடுதல் ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு பணியிடம் மாறுதல் தொடர்பாக பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும். அந்த வகையில் கலந்தாய்வு ஜூலை 1, 2025 முதல் தொடங்கியுள்ளது ஜூலை 30, 2025 வரை நடைபெறுகிறது.
34
ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
இதே போல இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 19 மற்றும் 21 ஆம் தேதிகளிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் நேற்று தொடங்கியது. அப்போது தாங்கள் பணிபுரிந்து வரும் ஊரில் இருந்து வெளியூர்களுக்கு தங்களது சொந்த ஊர் அல்லது பக்கத்து மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கேட்டு ஏராளமான ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வில் 454 பேர் இடமாறுதல் உத்தரவுகள் பெற்றுள்ளனர். மேல்நிலைப் பள்ளிகளுக்கு 254 தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 200 தலைமை ஆசிரியர்களும் தாங்கள் விரும்பிய ஊரில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து இட மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். இதையடுத்து, இன்று நடைபெறவுள்ள கலந்தாய்வில், அரசுப் பள்ளி, நகராட்சி உயர்நிலை மற்றும் மேனிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கவுன்சலிங் நடைபெறவுள்ளது.