நேற்று திருப்பூர்! இன்று திருவள்ளூர்! திருமணமான 4 நாட்களில் அதுவும் ஒரு சவரன் நகைக்காக இப்படியா?

Published : Jul 02, 2025, 10:33 AM ISTUpdated : Jul 02, 2025, 10:34 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமான 4வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் லோகேஸ்வரி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

PREV
15

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின் குமார்(28) என்பவருடன் இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்தார். அப்படி இருந்த வரதட்சணை கொடுமையால் பூச்சி மருந்து குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவள்ளூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

25

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 27ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 10 சவரன் வரதட்சனை கேட்டு, 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாகவும் பாக்கியுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

35

மறுவீட்டுக்காக நேற்று தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இதுகுறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், காலை எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும் பாத்திரங்களை கழுவ வேண்டும், சோபாவில அமர கூடாது என கூறி மாமியார் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியதாக தாய் மற்றும் தங்கையிடம் கூறி கதறி அழுதுள்ளார். பெரிய மருமகள் அதிக நகைக் கொண்டு வந்ததையும், பாக்கி 1 சவரன் நகையை வாங்கி வருமாறும், வீட்டிற்கு ஏசி வாங்கி கொடுக்குமாறும் தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளார்.

45

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது கழிவறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர். பின்னர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

55

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லோகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாருக்கு போலீசார் தேடிவருகின்றனர். 1 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஆர்டிஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories