நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!

Published : Aug 05, 2025, 01:54 PM IST

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 23ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15

ஆடி மாதம் என்பது தமிழ் மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதம் ஆகும். இம்மாதம் முழுவதும் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்தப்படும். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிக சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். குறிப்பாக பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழாக்களில் சேலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.

25

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஆகஸ்ட் 06ம் தேதி நாளை நடைபெறுவதை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

35

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

45

இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசின் பாதுகாப்புக்கான மற்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

55

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories