தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்த ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 01.04.2003 முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு, கடைசி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஓய்வூதியம் பெறுவதில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வயதான காலத்திலும் ஓய்வூதிய தொடர்பாக உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அலைய வேண்டிய நிலை உள்ளது.
24
ஓய்வூதியம் பெறுவதில் குளறுபடி
இதனையடுத்து ஓய்வூதியம் குறைகளை சரிசெய்ய சிறப்பு முகாமிற்கு தேதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ள அறிக்கையில், ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய 25.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள். ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் 12.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
எனவே. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று அரசு கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில் கீழ்காணும் படிவத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 62, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரிக்கு 25.08.2025-க்குள் அனுப்பி வைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.