அடி தூள்.! ஊழியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் அதிரடியாக உயர்வு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

Published : Aug 05, 2025, 01:36 PM ISTUpdated : Aug 05, 2025, 01:40 PM IST

தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் கோயில் ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளது. ஓய்வூதியம் ரூ.4,000-லிருந்து ரூ.5,000-ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,000-லிருந்து ரூ.2,500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

PREV
14
கோயில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்

தமிழக அரசானது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்ற பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் அறநிலையத்துறை ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை செயல்படுத்தும் வகையில் 2025-2026-ஆம் ஆண்டின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

 அந்த வகையில் திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறைநிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000/- ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.4.000/- லிருந்து ரூ.5.000/-ஆக உயர்வு செய்யப்படும்.

24
சட்டசபையில் வெளியான அறிவிப்பு

துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ.2.000/- ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.2000/-லிருந்து ரூ.2500/-ஆக உயர்வு செய்யப்படும் என அறிவித்தார்.  இதனையடுத்து இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடைசியாக பெற்ற மாத ஓய்வூதியத்தில் 50 சதவீதத்தை சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடும்ப ஓய்வூதியமாக வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. 

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் மேற்படி அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு, திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தினை ரூ.4.000/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தியும்.

34
ஓய்வூதியம் 5ஆயிரமாக உயர்வு

குடும்ப ஓய்வூதியம் ரூ.2000/-விருத்து ரூ.2.500/-ஆக உயர்த்தியும் அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. பரிசீலனைக்கு பின்னர், அதனை ஏற்று. இத்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தினை கீழ்க்காணுமாறு உயர்த்தி வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது-

44
அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கான துறை நிலையிலான ஓய்வூதிய திட்டத்தில் தற்போது பெற்று வரும் மாத ஓய்வூதியத்தினை ரூ.4,000/-லிருத்து ரூ.5,000/-ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. 

மேலும் ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் நேரடி வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தினை ரூ.2.000/-லிருந்து ரூ.2.500/- ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories