விவசாயிகளுக்காக மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் பல திட்டங்களை அறிவித்துள்ளன. இவை விவசாய உற்பத்தி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசை பொறுத்த வரை கடந்த நிதி நிலை அறிக்கையில் 7,000 விவசாயிகளுக்கு ரூ.215 கோடி மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
வெண்ணைப்பழம், பலா, மிளகாய், உதிரி ரோஜா போன்ற பயிர்களுக்கு சிறப்பு திட்டங்கள் (ரூ.69 லட்சம் முதல் ரூ.11.74 கோடி வரை ஒதுக்கீடு). இயற்கை வேளாண்மைக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு, உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. குழாய் கிணறு, ஆழ்துளை கிணறு, சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைப்பதற்கு 70% மானியம், கரும்பு உற்பத்திக்கு டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை, மொத்தம் ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.