அம்மா முத்தம் குடுத்தா எந்திரிப்பியே மா ரிதன்யா! கல் மனதையும் கலங்க வைக்கும் தாயின் கதறல்!

Published : Jul 02, 2025, 07:21 AM IST

திருமணமாகி 78 நாட்களில் மணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோவில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

PREV
15
வரதட்சணை கொடுமை

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மகள் ரிதன்யா திருமணமாகி 78 நாட்கள் ஆன நிலையில் அவிநாசியை அடுத்து மொண்டிபாளையம் கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

25
ரிதன்யாவின் வாட்ஸ் அப் ஆடியோ

தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் இருந்து தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலமாக, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் கடுமையான சித்திரவதை செய்து வந்ததாகவும், தன் சாவிற்கு தனது கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் தான் காரணம் என்று உருக்கமாக பேசிய ஆடியோவை அனுப்பியிருந்தார்.

35
மாமியார் சித்ராதேவி நிபந்தனையின் பேரில் விடுப்பு

இதையடுத்து சேயூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், துன்புறுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மூன்றாவது குற்றவாளியான மாமியார் சித்ராதேவியின் உடல்நலம் ஒத்துழைக்காததால் "பைண்டிங் ஆர்டர்" என்ற முறையில் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தெரிவித்தார்.

45
தாயார் ஜெயசுதாவின் கதறல்

இந்த வழக்கு குறித்து திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் மற்றும் அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட பின்பு காரிலிருந்து அவரது உடலை மீட்கப்படும் காட்சிகள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தனது மகளின் உடலை கண்டு அவரது தாயார் ஜெயசுதா, கதறி துடித்து அழுகும் காட்சி கல் மனதையும் கலங்க வைப்பதாக இருந்தது. அதில், அம்மா முத்தம் குடுத்தா எந்திரிப்பியே மா என நெஞ்சில் அடித்து கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

55
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ரிதன்யாவின் தந்தை

ரிதன்​யா​வின் தந்தை அண்​ணாதுரை கூறுகையில்: பாரம்​பரியக் குடும்​பம் என நம்பி பெண்​ணைக் கொடுத்து ஏமாந்​து​விட்​டோம். திரு​மண​மான 15 நாளில் ரிதன்யா எங்​கள் வீட்​டுக்கு வந்து கண்​ணீர் விட்டு அழு​தார். உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் அவரை மிக​வும் கொடுமைப்​படுத்தி உள்ளனர். திரு​மணத்​தின்​போது கணக்கில்லாமல் நகை போட்​டும், இன்​னும் நகை கேட்டு துன்​புறுத்தி உள்​ளனர். வீட்​டுக்​குள் பூட்டி வைத்து சித்​ர​வதை செய்​துள்​ளனர். என் மகளுக்கு நிகழ்ந்​தது​போல இனி யாருக்​கும் நடக்​கக் கூடாது என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனிடையே ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் உறவினர்கள், நேற்று சேலம் வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் அளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories