பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா.? ராமதாஸ் சொன்ன முக்கிய தகவல்

Published : May 21, 2025, 12:48 PM ISTUpdated : May 21, 2025, 01:02 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எந்த மனக்கசப்பும் இல்லை எனக் ராமதாஸ் கூறியுள்ளார்.

PREV
14

தமிழகத்தில் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்ட கட்சி பாமக, இந்த கட்சியின் நிறுவனராக உள்ள ராமதாஸ்க்கும் தலைவராக உள்ள அன்புமணிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அன்புமணி தனியாக எடுத்த காரணத்தாலும், இளைஞரனி தலைவராக சுகுந்தனை ராமதாஸ் நியமித்ததாலும் மோதல் உருவாகியுள்ளது. இதனால் இரு தரப்பிற்கும் நீயா.? நானா என போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சமான மோதல் பின்னர் கட்சி தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சற்று அமைதி அடைந்தது.

24

இந்த நிலையில் திடீரென பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், இனி பாமக தலைவராக நான் தான் என அறிவித்தார். மேலும் வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணியை எச்சரிக்கும் வகையில் ராமதாஸ் பேசினார். இது மட்டுமில்லாமல் புத்தக வெளியீட்டை புறக்கணித்து சென்றார். இதனை தொடர்ந்து பாமக தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் 95% நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. அன்புமணியின் உத்தரவின் காரணமாக கூட்டத்தில் பல்வேற்கவில்லையென தகவல் வெளியானது.

34

இந்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையே அமைதி ஏற்பட தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று பாமக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,  வன்னிய சமுதாயத்தில் எழுத படிக்க தெரியாமல் இருந்தார்கள். கை ரேகை தான் பதிவு செய்தார்கள். இன்று ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளேன். நீதிபதிகளை உருவாக்கியுள்ளேன். 

இந்திய அளவில் சமூக நீதியை பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது என கூறியவர், மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது என கூறினார்.

44

இதனை தொடர்ந்து அன்புமணிக்கு எதிரான மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லையென கூறினார். வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி கலந்து கொள்வார் என தெரிவித்தார். இதனையடுத்து இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு நீங்கிவிட்டதா.? என்ற கேள்விக்கு  கசப்பான செய்தியை என்றும் நான் சொல்வதில்லை, இனிப்பான செய்தியை தான் சொல்வேன். மேலும் பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கபோவதாக வதந்திகளை கிளப்பி விடுகின்றனர், அவர்கள் யார் என எனக்கு தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா? என கேள்வி எழுப்பினார்.

Read more Photos on
click me!

Recommended Stories