தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
25
சந்தனக்கூடு திருவிழா
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உலக பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு திருவிழா மே- 9ம் தேதி கொடியேற்றி திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை தொடங்கி நடைபெறுகிறது.
35
ராமநாதபுரம் மாவட்டம் உள்ளூர் விடுமுறை
நாளை அதிகாலையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏர்வாடி தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கும் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உள்ளூர் விடுமுறை அரசு ஊழியர்களுக்கு மட்டும் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
55
இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது
இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகள் செயல்படும். மேலும் ராமநாதபுரம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு கொண்டு செயல்படும் என தெரிவித்துள்ளார்.