தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்தவொரு டிராபிக்கிலும் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்களுக்கு செல்ல உதவியாக இருப்பது மின்சார ரயில்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.
23
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள்
இந்நிலையில் சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல் பயணிகள் பதற்றம் அடைந்தனர். அதாவது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற புறநகர் ரயிலின் 6வது பெட்டியில் திடீரென புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயிலில் இருந்து புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
33
ரயில்கள் அனைத்தும் நிறுத்தம்
இதனை தொடர்ந்து பின்னால் வந்த புறநகர் ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்தது பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்டதை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழித்தடத்தில் சென்ற ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் தொழில் நுட்ப கோளாறு மீண்டும் சரி செய்யப்பட்டு ரயில் சேவை தொடங்கியது.