என் மூத்த பிள்ளை குரு இருந்திருந்தால்... மாநாட்டில் திடீரென காடுவெட்டியாரை நினைவுகூர்ந்த ராமதாஸ் - அரங்கை அதிரவிட்ட தொண்டர்கள்

Published : Aug 11, 2025, 08:18 AM IST

எனது மூத்தப்பிள்ளை குரு இருந்திருந்தால் மாநாட்டை எப்படி நடத்தியிருப்பாரோ அந்த அளவிற்கு மாநாடு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார். 

PREV
14
மகளிர் மாநாடு

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர்சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்பதற்கு உதராணமாக கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை சுட்டிக்காட்டி தனது மகன் அன்புமணியை மறைமுகமாக சாடினார்.

24
இடஒதுக்கீட்டுக்காக போராட்டம்

தமிழகத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்துவதற்காக தமிழகத்தில் வலுவான போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம். எனது நண்பர் கலைஞர் கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வரலாற்றில் இடம் பெற்றார். அந்த வரிசையில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முதல்வர் ஸ்டாலினும் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்.

34
சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 17ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி குறித்து இப்போதைக்கு பேச முடியாது. கட்சியில் நான் சொல்வது மட்டுமே நடக்கும். பிறர் கூறுவதை நீங்கள் காது கொடுத்து கேட்க தேவையில்லை.

44
எனது மூத்த பிள்ளை குரு

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் குருயை எனது மூத்த பிள்ளையாக பார்த்தேன். எனது மூத்த பிள்ளை குரு உயிரோடு இருந்திருந்தால் இந்த மாநாட்டை எப்படி பிரமாண்டமாக நடத்தியிருப்பாரோ அதே போன்று டெல்டா மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்தி இருப்பதாகக் கூறினார். காடுவெட்டி குருவின் பெயரை ராமதாஸ் உச்சரித்ததும் மாநாட்டு திடல் அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

Read more Photos on
click me!

Recommended Stories