சென்னை மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்! 19 ரயில்கள் ரத்து! பயணிகளே நோட் பண்ணிக்கோங்க!

Published : Aug 10, 2025, 08:53 AM IST

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு மின்சார ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
Chennai-Gummidipoondi Electric Trains Cancelled

சென்னையில் கடற்கரை‍‍-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை‍-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் கைகொடுத்து வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இருந்தாலும், புறநகர் ரயில்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்கி வருகின்றன.

24
19 மின்சார ரயில்கள் ரத்து

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் அமைந்துள்ள பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்றன. 

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஆக்.10) மற்றும் நாளை (ஆக.11) காலை 10:30, 11:35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மற்றும் மாலை 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யபடுகின்றன.

34
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ரயில்கள்

இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10:15, மதியம் 12.10 மற்றும் 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், மதியம் 1:15, மாலை 3.15, இரவு 9 மணிக்கு சூலுர்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இது மட்டுமின்றி சென்னை கடற்கரையிலிருந்து காலை 9:40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10:55 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.

44
சென்னை சென்டிரல்-பொன்னேரி ரயில்

மேலும் சூலூர் பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6:45 மணிக்கு சூளூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலும், சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த 2 நாட்களிலும் சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு ரயில் இயக்கம்

இதுமட்டுமில்லாமல் சென்ட்ரல் - மீஞ்சூர் இடையே காலை 11:35 மணிக்கும், சென்னை கடற்கரை பொன்னேரி இடையே மதியம் 12:40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக பொன்னேரி சென்ட்ரல் இடையே மதியம் 1.18 மணிக்கும், மீஞ்சூர் - சென்ட்ரல் இடையே மதியம் 2:59 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories