TVK Volunteers Pray At Temple After TVK Executive Removed Party
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சியை பிடித்து வரும் நிலையில் இதற்கு மாற்றாக தவெக இருக்கும் என்று விஜய் கூறி வருகிறார்.
24
தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்
இதற்கு ஏற்றார்போல் விஜய்ய்யின் பக்கம் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சி தொண்டர்கள் அலை அலையாக செல்கின்றனர். இதனால் தவெக 2026 தேர்தலில் அதிசயம் நிகழ்த்துமா? என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், மற்ற கட்சிகளை போல் தவெகவிலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வருபவர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் த.வெ.க திருவள்ளூர் தெற்கு மாவட்ட பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
34
மண்சோறு சாப்பிட்ட தவெக நிர்வாகி
அடி தடி வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து நீக்கி தவெக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிய செயலாளர் ஜெகன் அப்பு நீக்கப்பட்ட சந்தோஷத்தில் தவெக நிர்வாகி வெற்றி வேல் என்பவர் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. அதாவது பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டையில் வசித்து வருபவர் தவெக நிர்வாகி வெற்றிவேல். இவர் ஜெகன் அப்புவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
பூந்தமல்லி கோயிலில் நேர்த்திக்கடன்
அப்படி ஜெகன் பாபு கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அம்மனுக்கு மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவதாகவும் கடந்த ஆண்டு வேண்டுதல் வைத்திருந்தார். கடந்த மாதம் அடி தடி வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறி ஜெகன் அப்புவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் உத்தரவிட்டார். தனது வேண்டுதல் நிறைவேறியதால் பூந்தமல்லியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனையாத்தம்மன் கோயிலில் தவெக நிர்வாகி வெற்றிவேல் மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் நிறைவேற்றியுள்ளார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் ''ஜெகன் பாபு கட்சிப் பதவிகளுக்கு பல நிர்வாகிகளிடம் பணம் பெற்று உள்ளார். எனது குடும்பத்தையே அழித்து விட்டார். அவர் போன்ற ஒருவர் கட்சியில் இருக்கக் கூடாது. அதனால் தான் அம்மனுக்கு வேண்டுதல் வைத்தேன். வேண்டுதல் நிறைவேறியதும் இப்போது மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.