சென்னை வாகன ஓட்டிகளே! 3 நாளைக்கு 'இந்த' பக்கம் போயிடாதீங்க! போக்குவரத்து மாற்றம்! முழு விவரம்!

Published : Aug 07, 2025, 02:36 PM IST

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
3 Days Traffic Change In Chennai

இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களும் பெருகி விட்டதால் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் இருந்தாலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை. நமது நாட்டில் சுதந்திர வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

24
சென்னையில் போக்குவரத்து மாற்றம்

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வருகிற 18.08.2025 ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைசெயலகத்தில் கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 08ம் தேதி, 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களுக்கு காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

34
உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை

உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

44
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

காமராஜார் சாலையிலிருந்து இராஜாஜி சாலை பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா அண்ணாசாலை, மன்ரோ சிலை, முத்துசாமி பாலம். முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம். 

அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை அடையலாம்.

இந்த வழியாக காமராஜர் சாலையை அடையலாம்

ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தலைமைசெயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல. பாரிமுனை. வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road). ராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை. முத்துசாமி பாலம். அண்ணாசாலை. மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories