தொடர் விடுமுறை! சொந்த ஊருக்கு போறீங்களா? தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சொன்ன குட்நியூஸ்!

Published : Aug 05, 2025, 08:56 PM IST

தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Special Bus Operation From Chennai To Coimbatore and Madurai

தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மேற்கண்ட நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

25
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இந்நிலையில், வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

35
மதுரை, கோவைக்கு சிறப்பு பேருந்துகள்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும், வரும் சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை, 55 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45
பெங்களுரூ, திருப்பூர்

பெங்களூரு, திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை அன்று 20 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் . ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

55
முன்பதிவு செய்தவர்கள் எத்தனை பேர்?

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,544 பயணிகளும் சனிக்கிழமை 2,570 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,710 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் MobileApp மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories