அவரை உடனே தடுத்து நிறுத்துங்க! சட்டம் ஒழுங்குக்கே பிரச்சினையாகிடும் - அன்புமணியை எகிறி அடிக்கும் ராமதாஸ்

Published : Jul 25, 2025, 08:04 AM IST

அன்புமணி மேற்கொள்ள உள்ள உரிமை மீட்பு பயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ள நிலையில் உரிமை மீட்பு பயணம் இன்று தொடங்கப்படுகிறது.

PREV
14
பாமக.வில் அதிகார மோதல்

பாமக.வில் தந்தை மகன் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. நான் தான் கட்சியின் நிறுவனர், நான் தான் தலைவர், அன்புமணி செயல் தலைவர் மட்டுமே என ராமதாஸ்ம், நான் தான் கட்சியின் தலைவர் என அன்புமணியும் மாறி மாறி சொல்லி வருகின்றனர். இதனிடையே அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 100 நாள் நடைபயணத்தைத் தொடங்க உள்ளார். இன்று தொடங்கும் நடைபயணம் தமிழ்நாடு நாளான நவம்பர் 1ம் தேதி நிறைவடைகிறது.

24
உரிமை மீட்பு பயணம்

இந்நிலையில் அன்புமணி தனது அனுமதி இல்லாமல் இந்த பயணத்தை திட்டமிட்டுள்ளார். கட்சியின் நிறுவனரான என் அனுமதி இல்லாமல் பாமக.வின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது. மேலும் அன்புமணியின் பயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உரிமை மீட்பு பயணத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். அன்புமணி பொதுமக்களை சந்திப்பதை அனுமதிக்கக் கூடாது என் ராமதாஸ் டிஜிபியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

34
தொண்டர்கள் குழப்பம்

ராமதாஸ், அன்புமணி இடையேயான அதிகார மோதலால் யார் பின்னால் செல்வது என தெரியாமல் பாமக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் அன்புமணி நியமிக்கும் நிர்வாகிகளை ராமதாஸ்ம், ராமதாஸ் நியமிக்கும் நிர்வாகிகளை அன்புமணியும் போட்டி போட்டு நீக்கி வருகின்றனர். இதனிடையே கட்சியில் தாம் நியமிக்கும் நிர்வாகிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ, இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்சியின் தலைமை அலுவலகம் இனி தைலாபுரம் மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.

44
அன்புமணியின் பயணத்திற்கு தடை?

இடியாப்ப சிக்கலையே மிஞ்சும் அளவில் உள்ள பாமக.வின் குழப்ப நிலைகளுக்கு இடையே அன்புமணியின் நடைபயணத்திற்கு காவல் துறை தடை விதிக்குமா அல்லது காவல் துறையின் பாதுகாப்போடு உரிமை மீட்பு பயணம் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories