கோயம்பேடு சந்தையில் வெங்காயம், தக்காளி விலை சரிவு. பல்வேறு காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியுடன் அதிக அளவில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
சமையலில் காய்கறிகளின் பங்கை பிரிக்க முடியாது. என்ன சமையல் செய்வதாக இருந்தாலும் காய்கறிகள் முக்கிய தேவை. ஏனெனில் அவை சத்தானவை, சுவையானவை, மற்றும் பலவித உணவுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. அதிலும் வெங்காயம், தக்காளி போன்றவை இனிப்பு, காரம் அல்லது புளிப்பு சுவைகளை வழங்குகின்றன.
காய்கறிகள் சாம்பார், ரசம், கூட்டு, அவியல் போன்ற பாரம்பரிய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் பச்சை காய்கறிகளை விட தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்தால் மக்களுக்கு கொண்டாட்டம் தான். பை நிறைய அள்ளி செல்வார்கள். இதுவே விலை அதிகரித்தால் குறைவான அளவு மட்டுமே வாங்க முடியும்
25
ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை
அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. ஆனால் அடுத்த சில மாதங்களில் விலையானது சரிய தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாயை தொட்டது. வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாயை எட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அதிகளவு வாங்கினார்கள்.
இந்த நிலையில் வெங்காயத்தின் வரத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவு வருவதால் விலையானது சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மூட்டை, மூட்டையாக வெங்காயம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.
35
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?
இதே போல தக்காளியின் வரத்தும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதையடுத்து விலையானது குறைய தொடங்கியுள்ளது. 100 ரூபாய்க்கு 3 முதல் 5 கிலோ வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒன்று 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும்,
வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
55
முருங்கைக்காய் விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம் சமையலுக்கு பெரும்பாலும் அதிகாரம் பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு தக்காளி ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் விற்பனையாகிறது