அதிமுகவில் இணைய வந்த பலரை திமுகவுக்கு அனுப்பி வைத்ததே நீங்கள் தானே! EPS-க்கு எதிராக கொதித்த முன்னாள் நிர்வாகி!

Published : Aug 19, 2025, 01:53 PM IST

அரசு அலுவலகங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் அதிமுகவினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் பச்சை குத்திக்கொள்ள சொன்னதாகவும் கேபி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

PREV
16

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக தொண்டர்களை பச்சை குத்திக்கொள்ள சொன்னது அன்றைய திமுக அதிமுகவினர் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர் அதிலிருந்து காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை பச்சைக் குத்திக்கொள்ள சொன்னார் என கே.பி.பழனிசாமி கூறியுள்ளார்.

26

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் பிரச்சார பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தான் கையில் பச்சை குத்திக்கொள்ள சொன்னார் என்பது போல பேசி புரட்சித்தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

36

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக தொண்டர்களை பச்சை குத்திக்கொள்ள சொன்னது அன்றைய திமுக அதிமுகவினர் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர் அதிலிருந்து காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை பச்சைக் குத்திக்கொள்ள சொன்னார். அரசு அலுவலகங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் பொதுநலன் சார்ந்த பிரச்சனைகளில் அதிமுகவினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் கட்சி பெயரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும் புரட்சித்தலைவர் அப்படி பச்சை குத்திக்கொள்ள சொன்னார். நீங்கள் சொல்வது போல் தொண்டர்கள் மீது நம்பகத்தன்மை இல்லாமல் மாற்றுக்கட்சிக்கு சென்றுவிடுவார்களோ என்று பச்சை குத்திக்கொள்ள சொல்லவில்லை. அதிமுகவை பற்றியும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றியும் உங்களுக்கு தெரிந்தால் பேசுங்கள் இல்லையென்றால் திலிப்பி திலிப்பி வேறு ஏதாவது பேசிக் கொண்டே இருங்கள்.

46

அதிமுகவால் அடையாளம் பெற்றவர்கள் திமுகவில் செழிப்பாக இருக்கிறார்கள்" என்று சொல்கிறீர்கள். ஆனால் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய வந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன், பழனியப்பன் மற்றும் பலரை திமுகவுக்கு அனுப்பி வைத்ததே நீங்கள் தானே. இன்றும் பலரை பார்த்து "இவர்கள் எல்லாம் எப்பொழுது திமுகவில் சேர்வார்கள் அதிமுகவை நாம் மட்டுமே தனித்த ஆண்டு அனுபவிக்க வேண்டும்" என்று நினைப்பதும் நீங்கள் தானே.

56

தான் முதல்வராக இருந்தபோது திமுகவின் மீது எந்த வழக்கும் தொடுக்கவில்லை என்பதை பெருமையாக சொல்கிறீர்கள். உண்மையான அதிமுக ரத்தம் உங்கள் உடலில் இருந்திருந்தால் ஜெயலலிதா அம்மா அவர்களின் மரணத்திற்கு காரணமே திமுக வழக்குகள் மூலமாக கொடுத்த நெருக்கடியும் நீதிபதி குன்கா கொடுத்த தீர்ப்பும் தான். ஆனால் திமுக மீது அம்மா காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளையும் நீங்கள் முறையாக நடத்தவில்லை. மாறாக உங்கள் ஆட்சி காலத்தில் நீங்கள் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் மீது வழக்கு தொடராமல் இருந்தீர்கள், அதனால் தான் அவர்கள் தற்போது உங்கள் மீது எந்த ஒரு வழக்கும் தொடராமல் இருக்கிறார்கள். இப்படி திமுகவுடன் மறைமுக உடன்படிக்கையோடு செயல்பட்டுவிட்டு இப்பொழுது உத்தம வேடம் போடவேண்டாம்.

66

உங்களை போல விசுவாசமாக உழைத்தால் உயர்ந்த பதவிக்கு வரலாம் என்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது விசுவாசம் இருந்திருந்தால் அவர் வகுத்த விதிகளின்படி தொண்டர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் MLAக்களை விலைக்கு வாங்கி முதலமைச்சர் ஆனீர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பொதுச்செயலாளர் ஆனீர்கள். நீங்கள் உழைத்து முன்னேறிவரும் இல்லை, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் இல்லை. அதனால் தான் மக்கள் உங்களுக்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்பை கொடுக்க மறுக்கிறார்கள். இதை புரிந்துகொண்ட இனிமேலாவது கட்சிக்கும், கட்சிக்காரர்களுக்கு விசுவாசமாக இருங்கள், கட்சியை ஒன்றுபடுத்தி வலிமைப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories