விடுமுறை நாளில் பணிபுரிந்தால் 1000 ரூபாய் ஊக்கத்தொகை.! கூட்டுறவுத்துறை சூப்பர் திட்டம்

Published : Jun 21, 2025, 07:33 AM IST

தமிழகத்தில் மலிவு விலையில் மருந்து வழங்கும் முதல்வர் மருந்தகத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், மருந்து விற்பனை குறைவாக இருப்பாக புகார் வந்த நிலையில் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

PREV
15
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம்

தமிழகத்தில் "முதல்வர் மருந்தகம்" திட்டம் மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன, இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மருத்துவச் செலவு குறைகிறது.

 முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் 2025 பிப்ரவரி 24 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டன. சென்னையில் மட்டும் 33 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜெனரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகமும், பிராண்ட் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களை இம்காப்ஸ் மூலமும் கொள்முதல் செய்யப்படுகிறது.

25
தள்ளுபடி விற்பனையில் மருந்துகள்

முதல்வர் மருந்தகத்தில் ஜெனரிக் மருந்துகள் அதிகபட்ச சில்லறை விலையைவிட 25% தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களை ஒப்பிடும்போது இங்கு விலை மேலும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தனியார் கடைகளில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் மாத்திரை இங்கு 11 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனவே முதல்வர் மருந்தகம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் முதல்வர் மருந்தகத்தில் உரிய விற்பனை இல்லாத காரணத்தால் மாவு பாக்கெட் விற்பனை நடைபெறுவதாக செய்தி வெளியானது. 

இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது.

35
முதல்வர் மாவகம் - அண்ணாமலை விமர்சனம்

பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள். பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். 

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள பதிலில், முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர் வரத்து குறைவாக உள்ளதாகவும் மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

45
முதல்வர் மருந்துகம் விற்பனை விவரம் என்ன.?

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் ஜெனரிக் மருந்துகள், நியூட்ராசுட்டிக்கல்ஸ், இந்திய மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் பிராண்டட் மருந்துகளை சந்தை விலையைக் காட்டிலும் 70 முதல் 90 விழுக்காடு குறைவான விலையில் விற்பனை செய்து வருகின்றன. மருந்தகங்கள் துவங்கிய பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 300 ரூபாய் சராசரி மருந்து விற்பனை இருந்த நிலையில் இருந்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 800 ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் துவக்கத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 5 நபர்கள் ஒவ்வொரு மருந்தகத்திற்கும் வந்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது நாளொன்றுக்கு சராசரியாக 20 நபர்கள் மருந்துகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெனரிக் மருந்துகளும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பிராண்டட் மருந்துகளும் முதல்வர் மருத்துவங்கள் வாயிலாக மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் 219 ஜெனரிக் மருந்துகளும், 170 பிராண்டட் மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

55
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

இது மட்டுமல்லாமல் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்பத் தேவைப்படும் பிற மருந்துகளையும் அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து 24 மணி நேரத்தில் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நடைமுறையும் அன்மையில் கொண்டுவரப்பட்டுள்ளது.முதல்வர் மருந்தகங்கள் நடத்தும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு சங்க மருந்தாளுனர்களுக்கு லாபத்தில் வழங்கப்பட்டு வந்த பங்குத்தொகையும் அதிகரிக்கப்பட்டு 75 சதவீதம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினங்களில் பணிபுரியும் மருந்தாளுனர்களுக்கு ரூபாய் 1000 வரை ஊக்க தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட எல்லா விதமான நடவடிக்கைகளையும் கூட்டுறவுத்துறை எடுத்து வருகின்றது.

மேலும், மருந்து கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாத பொருட்களை மருந்தகங்களில் வைத்து விற்பனை செய்ய இயலாது. எனவே, பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பாக்கெட் உணவு வகைகள் விற்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மை இல்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories