மாவட்ட செயலாளருக்கு எதிராக அரசியல் செய்யும் பொன்முடி! தொகுதியில் மாறும் சி.வி.சண்முகம்! பரபரக்கும் அரசியல்!

Published : Jun 20, 2025, 11:57 AM IST

விழுப்புரம் திமுகவில் பொன்முடிக்கும் லட்சுமணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதிமுகவில் சிவி சண்முகம் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாததால் அதிருப்தி நிலவுகிறது. 

PREV
15
பொன்முடி

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் வேலை சூடு பிடிக்கும் என்று பார்த்தால் ஊருக்கு ஊரு உள்ளடி அரசியல் தான் சூடு பிடித்து வருவது அம்பலமாகி வருகிறது. விழுப்புரம் திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. முதல் முறை சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழந்தார். பின்னர் சைவம், வைணவம் பற்றி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையானதை அடுத்து தனது பதவியை பறிக்கொடுத்தார். பட்டை நாமம் சர்ச்சையில் பொன்முடியும் கட்சி பதவி பறிக்கப்பட்டது. அடுத்தடுத்து பதவிகளை இழந்த பொன்முடிக்கு லோக்கல் அரசியலிலும் மவுசு குறைந்தது. இருப்பினும் கூட ஏட்டிக்கு போட்டியாக பொன்முடி அரசியல் செய்து வருவது விழுப்புரம் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவது என்கின்றனர் சொந்தக் கட்சியினர்.

25
விழுப்புரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொன்முடி

கடந்த காலங்களில் தனக்கு எதிராக போட்டிக்கு நின்ற நிர்வாகிகளை அடையாளம் என்று ஆக்கிய பொன்முடி தனியாளாக விழுப்புரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் பொன்முடி மீது எழுந்த சர்ச்சை காரணமாக அவரது மகன் கௌதம் சிகாமணி வசம் இருந்த நான்கு தொகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு எம்எல்ஏ லட்சுமணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. சமூக ரீதியாக லட்சுமணன் பலம் வாய்ந்த மாவட்ட செயலாளராக உருவெடுத்த நிலை அது பொன்முடிக்கு உறுத்தலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. நிர்வாகிகள் ஒருங்கிணைப்பது அனுசரிப்பது என லட்சுமணனுக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் வேளையில் பொன்முடி இறங்கி இருக்கிறாராம்.

35
லட்சுமணன் மீது ஏக கோபத்தில் பொன்முடி

மகனிடமிருந்து தொகுதிகளை பிரிக்க காரணமானவர் என்ற அடிப்படையிலும் தனது ராஜ்யத்தில் பங்கு போடுவதா என்ற அடிப்படையிலும் லட்சுமணன் மீது ஏக கோபத்தில் இருக்கிறாராம் பொன்முடி. லட்சுமணன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய அதே நாளில் மகன் கௌதம் சிகாமணி மாவட்ட செயலாளராக இருக்கும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை பொன்முடி நடத்தியதாக கூறப்படுகிறது. மத்திய மாவட்டமும், தெற்கு மாவட்டமும் மாறி மாறி முட்டிக்கொள்ள வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் தனியாக ஒதுங்கி விடுகிறாராம். ஏற்கனவே தலைமையின் அதிருப்பதி லிஸ்டில் இருக்கும் நமக்கு எதற்கு இந்த வம்பு என ஒதுங்கி கொள்கிறாராம். இதன் காரணமாக தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. திமுகவில் தான் இப்படி பிரச்சினை என்றால் அதிமுகவில் இன்னும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கிறது. ஏழு தொகுதிகளை அடங்கிய விழுப்புரம் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தான் ஒரே மாவட்ட செயலாளர் என்ற நிலையில் கடந்த மூன்று மாதங்களாக விழுப்புரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சி.வி சண்முகத்தை அதிகம் பார்க்க முடிவதில்லையாம்.

45
மயிலம் தொகுதியில் சிவி சண்முகம்

கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் லட்சுமணனிடம் தோற்றுப்போன சிவி சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிட தீவிரம் கட்டி வருகிறாராம். ஆகையால் சிவி சண்முகத்தின் மொத்த கவனமும் மயிலம் தொகுதியை மையப்படுத்தியே இருப்பதால் மற்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளில் கடும் தோய்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிர்வாகிகளும் சோர்வில் இருப்பதாக சொல்கிறார்கள். பணம் செலவு செய்து கட்சி பணிக்காக கட்டிய விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகம் எப்போதாவது தான் திறக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு அதிமுக நிர்வாகிகள் கட்சி பணியை விட்டு விலகி இருப்பதாக சொல்கிறார்கள்.

55
பெரிய அளவுக்கு நாட்டம் காட்டாத சிவி சண்முகம்

வட மாவட்டத்தில் திமுக பலமாக இருக்கிறது என்ற பார்வை முன் வைக்கப்பட்டாலும் விழுப்புரம் மாவட்டம் அதற்கு விதிவிலக்கே என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் தற்போது நிலைமை மாறி வருவதாக சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க இத்தனை நாளாக தனி ஆளாக விழுப்புரத்தை கட்டிப்பாட்டில் வைத்திருந்த சிவி சண்முகம் சமீப காலமாக கட்சிப் பணிகளில் பெரிய அளவுக்கு நாட்டம் காட்டாததற்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்ன சொல்கிறார்கள் ஏனென்றால் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்தது கூட காரணமாக இருக்கலாம் என சொல்கிறார்கள். ஏனென்றால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க மாட்டோம் என அழுத்தம் திருத்தமாக பேசி வந்ததில் சிவி சண்முகம் ஒருவர் என்ற நிலையில் கட்சியின் முடிவு காரணமாக கூட கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆகையால் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் அதிமுகவை இரண்டாகப் பிரித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories