இனி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் புறப்படாது! மின்சார ரயில் சேவையிலும் மாற்றம்!

Published : Jun 20, 2025, 10:43 AM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தாம்பரம்-கடற்கரை இடையேயான 6 மின்சார ரயில் சேவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

PREV
16
ரயில்வே துறை

நாடு முழுவதும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரயில் சேவையை அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

26
ஐந்து விரைவு ரயில்கள் மாற்றம்

இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஐந்து விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. எந்தெந்த ரயில்கள் என்பதை பார்ப்போம். எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 18-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

36
தெற்கு ரயில்வே

அதேபோல் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-கடற்கரை இடையிலான 6 மின்சார ரயில் சேவை இன்று முதல் வரும் ஆகஸ்டு 18-ம் தேதி வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும்.

46
மின்சார ரயில்களில் மாற்றம்

கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

56
தாம்பரம் செல்லும் மின்சார ரயில்

கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும். கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும். கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்.

66
வார நாட்களில் இயக்கப்படும் ரயில்கள்

அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட ரயில்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் இயக்கப்படும் ரயில்கள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை கடற்கரை-தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் மட்டும் இயக்கப்பட உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories