பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற பின்னர் முதல் கூட்டம் என்பதால் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24
ஆளும் தரப்புக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகள்
கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், “கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல். தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத பயணத்தின் முதல் படியாக நமது வெற்றித் தலைவர் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொள்ளத் தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஊர்களில் நம் வெற்றி தலைவரின் அனல் பறக்கும் பேச்சும், ஆளும் தரப்பை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
34
திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடு..?
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசியல் வரலாறு இதுவரை காணாத இந்திய அரசியல் அரங்கத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நம் வெற்றி தலைவருக்கு மக்கள் அளித்த வரவேற்பு இருந்தது. இது ஆள்வோருக்கும், அதிகார வெறி கொண்டோருக்கும் எரிச்சலூட்டியது. 2025 செப்டம்பர் 27ம் தேதி அன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மக்கள் சந்திப்பை முடித்து கரூரில் நடைபெற்ற நம் வெற்றித் தலைவரின் வெற்றி சந்திப்பில் திட்டமிட்டு கற்பனைக்கும் எட்டாத வகையில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டனவோ என்று என்னத்தக்க வகையில், அசம்பாவிதம் நிகழ்ந்தது.
அதில் நம் குடும்ப உறவுகளான 41 உயிர்கள் பலியாகினர் தமிழக அரசியல் வரலாற்று மாற்றத்தை விரும்பும் மக்கள் அரசியலை மையமாகக் கொண்ட நம் லட்சியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள வந்து உயிர் நீத்த நம் சொந்தங்களான அந்த தியாகிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை இந்த பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.