கரகாட்டக்காரன் திரைப்பட பாணியில் பதவி என்னிடம் இருக்கிறது, ஆனால் கட்சி யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை என்பது போல் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார்.
24
அதிமுக.வை கலாய்த்த உதயநிதி
அப்போது அவர் பேசுகையில், “கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கார் என்னிடம் இருக்கிறது, ஆனால் கார் வைத்திருந்தவரை யார் வைத்திருக்கிறார் என்பது போல் ஒரு காட்சி வரும். அந்த வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்னிடம் இருக்கிறது, ஆனால் கட்சி யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை என்பது போல் பழனிசாமி இருக்கிறார்.
34
திமுகவின் பி டீம்..?
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இவர்கள் அனைவரும் திமுக.வின் பி டீம் என்று பழனிசாமி சொல்கிறார். ஆனால் நான் சொல்கிறேன், கலைஞரின் உடன் பிறப்புகளான நீங்கள் இருக்கின்ற வரைக்கும் திமுகவுக்கு பி டீமும் தேவை இல்லை, சி டீமும் தேவை இல்லை. எப்பொழுதுமே எதிரிகளை நேருக்கு நேர் களத்தில் சந்திப்பது தான் திமுகவின் வரலாறு.
அதிமுக.வில் இன்னொரு காமெடியன் இருக்கிறார். அவர் தான் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன். அண்மையில் அவர் செய்தியாளர் சந்திப்பில், “அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு வந்தது. அவர் முதல்வரானது எப்படியென்றால் பிக்பாக்கெட் அடிச்சமாதிரி என்று சொல்லிவிட்டார். இந்த கருத்தை நான் சொல்லவில்லை. திண்டுக்கல் சீனிவாசன் தான் மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து வெளிப்படையாக பேசிவிட்டார். இப்படிப்பட்ட அடிமைகளையும், பாசிஸ்ட்களையும் நாம் மீண்டும் விரட்டி அடிக்க வேண்டியது தான் 2026 சட்டமன்ற தேர்தல்” என்று குறிப்பிட்டுள்ளார்.