Published : Sep 13, 2025, 03:26 PM ISTUpdated : Sep 13, 2025, 03:41 PM IST
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் முதல் நாள் பிரசாரம் இன்று திருச்சியில் தொடங்கிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜய்யின் பேசுவது கேட்காமல் தொண்டர்கள் ஏமாற்றம்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று முதல் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தொடர்ச்சியாக சனி கிழமைகளை குறி வைத்து திட்டமிடப்பட்டுள்ள விஜய்யின் சுற்றுப்பயணம் இன்று திருச்சியில் தொடங்கியது. எந்த நோக்கத்தில் விஜய் சனிக்கிழமையை தேர்வு செய்தாரோ தெரியவில்லை. அவரது முதல் நாள் உரையே தொண்டர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
24
ஊமை படம் பார்த்த தொண்டர்கள்
திருச்சி மரக்கடை பகுதியில் பேசத் தொடங்கிய விஜய் தொடக்கத்தில் திருச்சியை முதல் மாவட்டமாக தேர்வு செய்ததற்கான காரணத்தை குறிப்பிட்டு பேசினார். அப்போது திடீரென மைக்கை மாற்றிய நிலையில் அவர் பேசும் பேச்சு தொண்டர்களுக்கு கேட்கவில்லை. இதனால் தொலைக்காட்சி வாயிலாக விஜய்யின் பேச்சை கேட்க நினைத்தவர்கள் விஜய்யின் ஊமைப் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.
34
5 மணி நேரத் தாமதம்
முன்னதாக திருச்சியில் காலை 10.30 மணியளவில் விஜய் தனது பேச்சைத் தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விமான நிலையம் முதல் மரக்கடை வரையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூட்டத்தில் சிக்கிய பிரசார வாகனம் தொடர்ந்து வேகமாக வரமுடியாமல் ஆமை வேகத்திலேயே கடந்து வந்தது. இதனால்7 கிமீ தூரத்தை கடந்து மரக்கடை பகுதிக்கு வந்துசேர சுமார் 5.30 மணி நேரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் 10.30 மணிக்கு பதிலாக மாலை 3 மணியளவில் தான் விஜய் பேசத் தொடங்கினார்.
விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காக காலை 6 மணிக்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டனர். இதனால் காலை, மதியம் என இருவேளையும் உண்ணாமல் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்து விழுந்தனர். அவர்களை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.