Quarterly Exam: தமிழகத்தில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வில் தனி வினாத்தாள்கள் வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு திறன் பாடப்புத்தகம் சார்ந்து வினாத்தாள்கள்
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
25
பள்ளிக் கல்வி இயக்குநர்
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: மாநில பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "திறன்" (THIRAN) திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்காக, வரவிருக்கும் காலாண்டுத் தேர்வுகளில் திறன் பாடப்புத்தகம் சார்ந்து வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.
35
காலாண்டுத் தேர்வு வினாத்தாள்
தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள், திறன் Part 1 Module 1ல் உள்ள அடிப்படை கற்றல் விளைவுகள் (Basic Learning Outcomes) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்கள், அடிப்படை கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த வினாத்தாள்களின் மொத்த மதிப்பெண்கள், வழக்கமான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்களின் மதிப்பெண்களோடு சமமாகவே இருக்கும்.
மேலும், பயிற்சி நோக்கத்திற்காக, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள்கள் செப்டம்பர் 8 (திங்கட்கிழமை) முதல் செப்டம்பர் 10 (புதன்கிழமை) வரை பதிவிறக்கம் செய்யக் கூடியவாறு வழங்கப்படுகின்றன. காலாண்டுத் தேர்வுகளுக்கான அனைத்து வினாத்தாள்களையும், முன்னர் அடிப்படைத் மதிப்பீடு (Baseline Test) வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்ட அதே தளமான exam.tnschools.gov.in என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த வினாத்தாள்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்த விரிவான நடைமுறைகள், இச்சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
55
வினாத்தாள்கள் பதிவிறக்கம்
ஆகையால், திறன் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு (Focused Learners) பாடவாரியான வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, காலாண்டுத் தேர்வுகள் நடையின்றி நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், வினாத்தாள்களை தக்க நேரத்தில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.