உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கல்லூரி மாணவியை மடக்க நினைத்த பேராசிரியர் சஸ்பெண்ட்!

Published : Sep 13, 2025, 12:12 PM ISTUpdated : Sep 13, 2025, 12:33 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர் நாகராஜன், மாற்றுத்திறனாளி மாணவியிடம் ஆபாசமாகப் பேசியதாக புகார் எழுந்துள்ளது. 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
14
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்​லூரி​

திருச்சி மாவட்​டம் முசிறி​யில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்​லூரி​யில் தமிழ்த் துறை பேராசிரிய​ராக பணியாற்றி வருபவர் நாக​ராஜன்(52). இவர், கல்​லூரி​யில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17வயது மாற்றுத்திறனாளி மாண​வி​யிடம் செல்போனில் ஆபாச​மாக பேசிய ஆடியோ சமூக வலை​தளத்​தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
கல்லூரி மாணவி

அதில் உன்ன எனக்கு பிடிக்கும். அதனால் உன்கிட்ட மட்டும்தான் நான் கேட்க முடியும். இருப்பியா? மாட்டியா?... அத மட்டும் சொல்லு. உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கிடைக்காதா? உன்னை கட்டி பிடிக்க கூடாது, முத்தம் கொடுக்கக் கூடாது என்றால் எதுக்கு பழகணும் சொல்லு என்று செல்போனில் அந்த மாணவிகளிடம் பேராசிரியர் கேட்கிறார். பேராசிரியர் நாகராஜனுக்கும், மாணவிக்கும் இடையே உரையாடல் 9 நிமிடம் 36 செகண்ட் தொடர்கிறது.

34
பேராசிரியர் நாகராஜனிடம் விசா​ரணை

இதுதொடர்​பாக, அரசு கலைக் கல்​லூரி முதல்​வர் கணேசன் மற்​றும் கல்​லூரி உள் விவ​கார விசா​ரணைக் குழு​வினர் விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்​து, திருச்சி மண்டல கல்​லூரிக் கல்வி இணை இயக்​குநர் ராதாகிருஷ்ணன் மற்​றும் மாவட்ட சமூக நலத் துறை அலு​வலர்​கள் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் நாகராஜனிடம் விசா​ரணை நடத்​தினர்.

44
பேராசிரியர் நாக​ராஜன் சஸ்பெண்ட்

முதற்கட்ட விசாரணையில் தமிழ் துறை பேராசிரியரின் தவறு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கணேசன் தெரிவித்தார். இதையடுத்​து, துறைரீ​தி​யான விசாரணை அறிக்​கையை கல்​வித் துறை உயர் அலு​வலர்​களுக்கு கல்​லூரிக் கல்வி மண்டல இணை இயக்​குநர் ராதாகிருஷ்ணன் அனுப்​பி​வைத்​தார். அதன்​பேரில், பேராசிரியர் நாக​ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories