எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அருணுடன் பழகிய மீனா! ஃபுல் மப்பில் கணவர்! நள்ளிரவில் அலறிய மேடவாக்கம்!

Published : Sep 13, 2025, 03:13 PM IST

Husband Arrest: சென்னை மேடவாக்கத்தில் கள்ளக்காதல் சந்தேகத்தில் மனைவியை கழுத்தறுத்து கணவன் கொலை செய்துள்ளார். அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், போதையில் வந்த கணவன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை.

PREV
15
கணவன் மனைவி

சென்னை அடுத்த மேடவாக்கம் விஜயநகர் பூங்கா தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(38). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனா(40). அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 22 வயதில் ஒரு மகன் மற்றும் 21 வயதில் மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

25
கள்ளக்காதல்

இந்நிலையில் சத்தியசீலன் மனைவி மீனாவிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் கணவர் சத்தியசீலனுக்கு தெரியவந்தது. இதுதொடர்பான மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

35
கடுமையான வாக்குவாதம்

இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய சத்தியசீலன் ஃபுல் மப்பில் வந்துள்ளார். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மீண்டும் கணவன், மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்ததால் கடும் ஆத்திரமடைந்த சத்தியசீலன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனா கழுத்தை அறுத்துள்ளார்.

45
மனைவி கொலை

இதனால் அலறியபடி ரத்த வெள்ளத்தில் மீனா சரிந்தார். இவரது அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மீனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

55
கணவர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக மேடவாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனாவின் உடலை மீட்டு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சத்தியசீலனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மீனாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, கணவர் இறந்த நிலையில், சத்தியசீலனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. பக்கத்து வீட்டு இளைஞருடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்து மனைவியை கொலை செய்ததாக சத்தியசீலன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories