ஆண்டு இறுதித் தேர்வு
அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, 1ம் வகுப்பு 5ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
தேர்வு அட்டவணை
அதேபோல் 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ம் தொடங்கி 24ம் தேதி வரையில் நடத்தப்படுகிறது. அதாவது ஏப்ரல் 8ம் தேதி தமிழ்ப்பாடத் தேர்வு, 9ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணக்கு, 17ம் தேி விருப்ப மொழி, 21ம் தேதி அறிவியல், 22ம் தேதி விளையாட்டு, 23ம் தேதி 6, 7ம் வகுப்புகளுக்கு மட்டும் சமூக அறிவியல், 24ம் தேதி 8, 9ம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கின்றன.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!
பள்ளி மாணவர்கள்
மேற்கண்ட தேர்வுகளில் 1, 2, 3,ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 4, 5ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக 6, 7ம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 8, 9ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் சமூக அறிவியல் தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் வெயில் அதிகமாக உள்ள காரணத்தால், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்படும். மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.