அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி வழக்கு
கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி- எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2000க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மூன்று வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நமது எதிரி இவர்கள் தான்! திமுகவுக்கு வேலை பார்க்கும் அண்ணாமலை! இறங்கி அடித்த ஆதவ் அர்ஜூனா!
ஊழல் எதிர்ப்பு இயக்கம்
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 2000க்கும் அதிகமான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், 600-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையை முடிக்க பல ஆண்டுகளாகும் என்பதால் வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
சிறப்பு நீதிமன்றம்
காவல் துறை தரப்பில் வழக்கில் குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை. வழக்குகளை சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு தான் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர், மூன்றாம் நபர் என்றும் வழக்கில் அரசு தரப்பு சாட்சியல்ல என தெரிவிக்கப்பட்டது. வழக்குகளைத் தனித்தனியாக விசாரித்தால் தான் தாமதமாகும் என்பதால், சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி தான் எனவும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: ஒரே போஸ்டர்! நான் முதலமைச்சரா பதறிய புஸ்ஸி ஆனந்த்! அலறிய மாவட்டச் செயலாளர்! நடந்தது என்ன?
சிறப்பு நீதிமன்றம் உத்தரவை உறுதி செயத ஐகோர்ட்
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மூன்று வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவில் தலையிட முடியாது. இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்குகளை சேர்த்து விசாரிப்பது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.