சென்னையைக் கலக்கப் போகும் ஏசி எலெக்ட்ரிக் பஸ்! வைரல் போட்டோஸ்!

சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் ஏசி மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக சென்னையில் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் வழங்கப்பட உள்ளன.

Ultra Modern AC Electric Buses to Hit Chennai Roads, Viral Photos sgb
AC Electric Buses in Chennai, Viral Photos

மின்சாரப் பேருந்துகள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் ஏசி மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருக்கிறது. முதலில் சென்னையில் 100 ஏசி மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்போது, இந்தப் பேருந்துகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  

Ultra Modern AC Electric Buses to Hit Chennai Roads, Viral Photos sgb
AC Electric Buses in Chennai, Viral Photos

ரூ.170 கோடி செலவு:

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் 2024 ஜனவரி 11ஆம் தேதி 100 மின்சாரப் பேருந்துகளுக்கான வேலையைத் தொடங்கியது. தனியார் நிறுவனம் மூலம் இவை இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இயக்கம் மற்றும் பராமரிப்புக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. மொத்தம் ரூ.170 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்ட்ரல் டிப்போ மற்றும் அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.


AC Electric Buses in Chennai, Viral Photos

ஜெர்மன் கடன் உதவி:

ஜெர்மன் நிறுவனமான KfW கடன் உதவியுடன் முதல் கட்டமாக 100 மின்சாரப் பேருந்துகளை வாங்கத் திட்டமிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்தானது. இருந்தாலும் பல காரணங்களால் திட்டம் தாமதம் ஆனது. ஒப்பந்தத்தின்படி, முதல் 50 பேருந்துகளுக்கான முன்மாதிரி ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்குள் அந்தப் பேருந்துகள் கிடைக்கும். அதன்பிறகு, எஞ்சிய 50 பேருந்துகளும் அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கும்.

AC Electric Buses in Chennai, Viral Photos

அசோக் லேலண்ட் நிறுவனம்:

அசோக் லேலண்ட் நிறுவனம் 500 ஸ்விட்ச் EiV12 வகை மின்சார பேருந்துகளை வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த 12 மீட்டர் நீளமுள்ள பேருந்துகளை அடுத்த 12 ஆண்டுகளுக்கு பராமரித்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 100 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், அவற்றின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.  

AC Electric Buses in Chennai, Viral Photos

நவீன வசதிகள்:

இந்த மின்சார பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளன. தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்புகள், தானியங்கிக் கதவுகள், GPS ரூட் மேப்பிங் செய்வதற்கான இன்டெலிஜென்ட் ட்ரான்ஸ்போர்ட் சிஸ்டம், சிசிடிவி கேமராக்கள், அறிவிப்புகளைக் காட்டும் திரைகள், எல்இடி விளக்குகள், டிரைவர் கேபினில் மைக், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆங்கிலம் மற்றும் தமிழில் வழிகாட்டும் திரைகள், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எனப் பல நவீன வசதிகள் இந்தப்ப பேருந்துகளில் இருக்கும்.

Latest Videos

vuukle one pixel image
click me!