chain snatching
chennai chain snatching-சென்னையில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 25ஆம் தேதி (நேற்று) நடந்த தங்கச் சங்கிலி வழிப்பறி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
எட்டு இடங்களில் செயின் பறிப்பு
சென்னையில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 25ஆம் தேதி (நேற்று) நடந்த தங்கச் சங்கிலி வழிப்பறி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
என்கவுண்டர் நடந்தது எப்படி
பின்னர் இதுகுறித்து போலீசாரின் விசாரணையில், இருவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் ஜாபர் குலாம் ஹுசைன் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த பொங்கலன்று தாம்பரம் பகுதியில்10க்கும் மேற்பட்ட இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு பின்னர் விமானத்தில் தப்பிச் சென்றதும் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜாபர் குலாம் ஹுசைனை நேற்று நள்ளிரவு தரமணி பகுதியில் வைத்து திருவான்மியூர் போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறுகையில், ''ஒரு மணி நேரத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நகைகளை தரமணி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்பதற்காக கைது செய்யப்பட்ட ஜாபரை போலீசார் தரமணிக்கு அழைத்துச் சென்ற போது அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து ஜாபர் போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது திருவான்மியூர் காவல் ஆய்வாளர் தற்காப்பிற்காக ஜாபரை நோக்கி சுட்டுள்ளார். இதில், ஜாபர் குலாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
சென்னையை கதிகலங்க வைத்த இரானி கொள்ளை கும்பல் யார்? என்கவுன்டர் செய்தது இந்த போலீஸா?