செயின் பறிப்பு
எப்போது பரபரப்பாக காணப்படும் தலைநகர் சென்னையில் நேற்று காலை பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி என ஒரு மணிநேரத்திற்குள் 6 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்டுபாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை நகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன தணிக்கை
அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் சென்னை விமான நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து போர்டிங் முடிந்து விமானத்தில் ஏற தயாராக இருந்த வடமாநில கொள்ளையர்களான குலாம், சூரஜ் ஆகியோரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
கொள்ளை கும்பல் கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூட்டாளியான 3-வது நபர், தங்க நகைகளுடன் சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு ரயிலில் தப்பிச் செல்வதாக கூறினர். இதையடுத்து, ஆந்திராவின் நெல்லூரை அடுத்த பித்தரகண்டா ரயில் நிலையத்தில் 3-வது கொள்ளையனை ரயில்வே காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சென்னை தரமணியில் வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
என்கவுன்டர்
இதனையடுத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நகைகளை மீட்க அழைத்து சென்றபோது தரமணி ரயில் நிலையம் அருகே குலாம் போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதாகவும் இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுன்டரில் குலாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இரானி கொள்ளை கும்பல்
இரானி கொள்ளை கும்பல் யார்?
இதனிடையே செயின் பறிப்பு சம்பவத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜாபர் இரானி கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மக்களை திசை திருப்பி கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவதுதான் இரானி கும்பலின் வேலை. ஈரானை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர். அடிப்படையிலேயே ஜவான்கள் போன்று வலுவான உடல்வாகு கொண்ட இவர்கள் இந்த இரானி கொள்ளையர்கள். குறிப்பாக பெண்களை குறி வைத்து கொள்ளை வழிப்பறியில் ஈடுபடுவதும் இவர்களது பாணி என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் பொறுப்பேற்ற பின் 4வது என்கவுன்ட்டர்
ஜாபரை என்கவுன்ட்டர் செய்தவர் யார்?
இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த குலாம் என்பவரை என்கவுன்ட்டர் செய்த திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் பொறுப்பேற்ற பின் 4வது என்கவுன்ட்டர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், ரவுடி காக்காதோப்பு பாலாஜி, ரவுடி சீசிங் ராஜா, ஜாபர் ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.