மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை! மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்!

Published : Mar 18, 2025, 12:35 PM ISTUpdated : Mar 18, 2025, 12:37 PM IST

MTC Apprenticeship 2025: சென்னையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயிற்சி பெற ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு வாய்ப்பு. மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும்.

PREV
14
மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை! மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்!
MTC Bus

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநகரப் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

24
Chennai MTC Bus

இந்நிலையில் மாநகர பேருந்துகளை பராமரிக்க சென்னையில் பல்வேறு இடங்களில் டெப்போக்கள் உள்ளன. இங்கு மெக்கானிக்கல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவினரும் பணியாற்றி வருகிறார்கள். சென்னை மாநகர போக்குவரத்து கழக்கத்தில் அவ்வப்போது தொழில் பழகுநர் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். 

இதையும் படிங்க: மினி பேருந்து கட்டணம் உயர்வு! எவ்வளவு உயர்ந்தது? எப்போது முதல்!

34
MTC Apprenticeship 2025

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வருடம் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ஐடிஐ பிரிவுகளில் (மோட்டார் வாகன மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், பெயிண்டர், வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இதையும் படிங்க: கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிப் படுகொலை! யார் இந்த ஜாகீர் உசேன்?

44
Scholarship

ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு ஏப்ரல் 2-ம் அன்று காலை 10 மணியளவில் மாநகர் போக்குவரத்து கழக  தொழிற்சி பயிற்சி பள்ளி குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மூகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் இம்மூகாமில் தகுதிடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories