MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிப் படுகொலை! யார் இந்த ஜாகீர் உசேன்?

கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிப் படுகொலை! யார் இந்த ஜாகீர் உசேன்?

Tirunelveli Retired Police Murder: கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக  ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 18 2025, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Murder

Tamilnadu Murder

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

24
Zakir Hussain Murder

Zakir Hussain Murder

நெல்லை டவுண்காட்சி மண்டம் அருகே வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜில். ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

34
Police investigation

Police investigation

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜாகீர் உசேன் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

44
Karunanidhi

Karunanidhi

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திலும் இருந்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இடம் பிரச்சனை தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா என தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக  ஜாகீர் உசேன் பிஜில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved