நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி. தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி்க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.