புதுசா கார் வாங்க போறீங்களா? இனி பார்க்கிங் வசதியும் இருந்தால்தான் வாங்க முடியும்!

Published : Mar 13, 2025, 11:22 AM ISTUpdated : Mar 13, 2025, 11:33 AM IST

Chennai Car Parking Rules: சென்னையில் கார் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய விதிமுறை வரவுள்ளது. இனி கார் வாங்க பார்க்கிங் சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். 

PREV
14
புதுசா கார் வாங்க போறீங்களா? இனி பார்க்கிங் வசதியும் இருந்தால்தான் வாங்க முடியும்!
Car parking

சைக்கிள், இருசக்கர வாகனங்கள் வைத்திருந்தவர் போய் தற்போது விட்டுக்கு வீடு கார் வாங்கி வருகின்றனர். சிலர் பொருளாதார வசதி உள்ளவர்கள் தங்கள் வசதிக்காகவும் கெத்தை காட்டவும் கார் வாங்குகிறார்கள். சிலர் ஆசைக்குக் கார் வாங்கிவிட்டு, பார்க்கிங் செய்ய இடமில்லாமல் சிரமப்படுவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. 

24
chennai corporation

இதனால், பார்க்கிங் இல்லாததால் சாலையோரம் மற்றும் தெருக்களிலும் கார்களை நிறுத்துவதால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை பார்க்கிங் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை மாநகராட்சி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. கார் நிறுத்துவதற்கு இடம் இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற விதிமுறையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்! கோடை விடுமுறை எப்போது? எத்தனை நாட்கள்? மீண்டுகள் பள்ளிகள் திறப்பது எப்போது?

34
car parking

அதாவது இனி சென்னையில் புதிய கார் வாங்குவோர் காரை பதிவு செய்யும்போது அதற்கான பார்க்கிங் இடம் தனது வீட்டிலோ அல்லது தனியார் இடத்திலோ இருப்பதை உறுதி செய்து அதற்கான சான்றை இருப்பதற்கான ஆவணத்தை காட்ட வேண்டும் என்பது அவசியம். அவர்களின் இந்த பரிந்துரையை, மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

44
Chennai parking policy

இந்த புதிய விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரலாம் என தெரிகிறது. இது நடைமுறைக்கு வந்தபின், வாகனம் வாங்குவோர், அதை பதிவு செய்யும்போது பார்க்கிங் வசதி இருப்பதை உரிமையாளர் உறுதி செய்து அதற்கான ஆவணங்களையும் காண்பிக்க வேண்டும். புதிய விதிமுறைகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories