அலறிய சென்னை மக்கள்! நடுரோட்டில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அடுத்த சில நிமிடத்தில் மற்றொரு பயங்கரம்!

Published : Feb 27, 2025, 08:56 AM ISTUpdated : Feb 27, 2025, 09:00 AM IST

சென்னையில் ரவுடி ராபர்ட் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே கும்பல் அயனாவரத்தில் ரேவதி என்பவரை வீட்டிற்குள் புகுந்து வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளது. 

PREV
15
அலறிய சென்னை மக்கள்! நடுரோட்டில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அடுத்த சில நிமிடத்தில் மற்றொரு பயங்கரம்!
Chennai Crime News

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றதில் இருந்த தலைநகர் சென்னை கொஞ்ச நாள் அமைதியாக இருந்த நிலையில் மீண்டும் அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

25
Chennai Rowdy Robert

சென்னை கிழக்கு அண்ணா நகர், அன்னை சத்யா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி ராபர்ட் (28). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. B கேட்டகிரி ரவுடியாக இருந்த  ராபர்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் A கேட்டகிரி பட்டியலில் இணைக்கப்பட்டார். 

35
Chennai Rowdy Murder

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் அன்னை சத்யா நகர் இரண்டாவது தெருவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. 

45
Police investigation

ரத்த வெள்ளத்தில் சரிந்த ராபர்ட் உயிரிழந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்ததில் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராபர்ட் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த சில நேரத்தில் அதே கும்பல் அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பில் உள்ள ரேவதி (32) என்பவரை வீட்டிற்கு புகுந்து தலையில் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

55
revenge

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராபர்ட் கூட்டாளியான கோகுல் என்பவரை அயனாவரத்தில் 2019ல், லோகு என்பவர் கொலை செய்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராபர்ட், லோகு இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது.

click me!

Recommended Stories