Published : Feb 16, 2025, 10:59 AM ISTUpdated : Feb 16, 2025, 11:01 AM IST
செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று பேர், பணம் கொடுக்க மறுத்து ஹோட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு, கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சாப்பிட்டதற்கு என்கிட்டையே காசு கேக்குறீயா? உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு(45). இந்த ஹோட்டலுக்கு போதையில் வந்த மூன்று பேர் மூக்கு புடிக்க சாப்பிட்டுள்ளனர். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். ஆனால் ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த ஆக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அப்போது போதையில் இருந்த கும்பல் தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் ஹோட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுங்கியது மட்டுமல்லாமல் பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை வெட்டி விட்டு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி நிலையில் கிடந்தார்.
24
சிசிடிவி காட்சிகள்
பின்னர் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
34
சுடுகாட்டில் பதுங்கி இருந்த ரவுடிகள்
போலீசார் விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார்(23), அவரது நண்பர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்(25), முத்து (30) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் செம்பரம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
44
கை எலும்பு முறிவு
அப்போது அவர்களுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தை பறித்தது தெரியவந்தது. அதாவது குடிபோதையில் ஹோட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றபோது நூம்பல் பகுதியில் நடந்து சென்ற வடமாநில வாலிபரை வெட்டி அவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். அதேபோல் தாம்பரம் மதுரவாயல் பைபாசில் சென்ற போது அம்பத்தூரில் வந்த நபரை கத்தியால் வெட்டி விட்டு அவரிடம் இருந்து பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.