கடலூரில் உருவான காதல்! நொடியில் வண்டலூரில் முடிந்த சோகம்! நடந்தது என்ன? நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!

Published : Feb 13, 2025, 11:13 AM ISTUpdated : Feb 13, 2025, 11:26 AM IST

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், கடலூரைச் சேர்ந்த விக்ரம் மற்றும் ஆதிலட்சுமி என்ற காதல் ஜோடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

PREV
14
கடலூரில் உருவான காதல்! நொடியில் வண்டலூரில் முடிந்த சோகம்! நடந்தது என்ன? நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!
கடலூரில் உருவான காதல்! வண்டலூரில் முடிந்த சோகம்! நடந்தது என்ன? நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் விரைந்தனர். அப்போது உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கிடந்த இளைஞர் மற்றும் இளம்பெண் சடலங்கள் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

24
ரயில்வே போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உயிரிழந்தவர்கள் யார் என்பது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் 
கடலூர் மாவட்டம் பாடியநல்லூரை சேர்ந்த விக்ரம் (22). கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (22) என்பது தெரியவந்தது.  இருவரும், கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். 

34
காதல் ஜோடி

அப்போது இருவரும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு இருவரும் படிப்பை முடித்துவிட்டு சில மாதத்துக்கு முன்பு இருவரும் சென்னையில் வேலை செய்வதற்காக வந்தனர். பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வார விடுமுறை மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் சந்தித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

44
மின்சார ரயில் மோதி பலி

அதேபோல் வழக்கம் போல இருவரும் பேசிக்கொண்டே தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்கு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது அவ்வழியே வந்த மின்சார ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் உடல் பாகங்கள் சிதறி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவனக்குறைவால் இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விட்டதும், அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. மின்சார ரயில் மோதி காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories