சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதியில்? எதற்காக? இதோ முழு விவரம்!

Published : Feb 05, 2025, 08:02 AM ISTUpdated : Feb 05, 2025, 08:04 AM IST

இங்கிலாந்து பாப் பாடகர் எட் ஷீரனின் சென்னை இசை நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

PREV
14
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதியில்? எதற்காக? இதோ முழு விவரம்!
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதியில்? எதற்காக? இதோ முழு விவரம்!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாப் பாடகர் எட் ஷீரன். இவருடைய முதல் ஆல்பமான 'பிளஸ்' பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான, ஷேப் ஆப் யூ, ஷிவர்ஸ் போன்றவை இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. இவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி புனே, யாஷ் லான்ஸ்,  பிப்ரவரி 2ம் தேதி ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி நடத்திய நிலையில் இன்று எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

24
சென்னை போக்குவரத்து காவல்துறை

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சர்வதேச பாடகர் எட் ஷீரனின் 2025 இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக  இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 3 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன.

34
போக்குவரத்து மாற்றங்கள்

மேற்படி நிகழ்ச்சிக்கு தேனம்பேட்டை வழியாக பார்வையாளர்களை ஏற்றி வரும் ஆட்டோரிக்ஷா மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/ காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோடு, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம். சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம். அண்ணாசாலையில் வரும் ஒய்.எம்.சி.ஏ பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில் விவிஐபி பாஸ் மற்றும் திரை கலைஞர்கள் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

44
சென்னை வாகன ஓட்டிகள்

இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ இரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார இரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories