நள்ளிரவில் அலறிய சென்னை! குத்துச் சண்டை வீரர் ஓட ஓட வெட்டி படுகொலை! பீதியில் பொதுமக்கள்!

Published : Jan 30, 2025, 10:09 AM ISTUpdated : Jan 30, 2025, 10:12 AM IST

சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
14
நள்ளிரவில் அலறிய சென்னை! குத்துச் சண்டை வீரர் ஓட ஓட வெட்டி படுகொலை! பீதியில் பொதுமக்கள்!
நள்ளிரவில் அலறிய சென்னை! குத்துச் சண்டை வீரர் ஓட ஓட வெட்டி படுகொலை! பீதியில் பொதுமக்கள்!

தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டு புதிய ஆணையராக அருண் பொறுப்பேற்றதில் இருந்து குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் அடுத்தடுத்த என்கவுண்டர் சம்பவங்களும், கைது நடவடிக்கையும் தான். கொஞ்சநாள் அடங்கி இருந்த ரவுடிகள் மீண்டும் அடுத்தடுத்து கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். 

24
Chennai Murder

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(24). இவர் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார். ஜிம்மில் டிரெய்கராக இருந்து கொண்டே காவல்துறை தேர்வுக்கும் தயராகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் காவல்துறை தேர்வுக்குத் தயாராக முடியாத நிலை ஏற்பட்டது. 

34
Boxer murder

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே தனுஷ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் தனுஷை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க வந்த அவரது நண்பர் அருணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது.

44
Police investigation

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 9 பேரிடம் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!

Recommended Stories