Chennai Power Cut: சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்!

First Published | Jan 24, 2025, 11:06 PM IST

சென்னையின் முக்கிய பகுதிகளான டைடல் பார்க் மற்றும் கிண்டியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். 

Power Cut

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்பது உண்டு. அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை. 

Chennai Power Cut

இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


power shutdown

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதாவது டைடல் பார்க்,  கிண்டி பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tidel Park

டைடல் பார்க்: 

தரமணி பகுதி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர் நகர் (எஸ்.ஆர்.பி டூல்ஸ் & கனகம்), வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ எஸ்டேட் கட்டம்-I, 100 அடி சாலை பகுதி, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர் சாலை, ஆர்.எம்.இசட் மில்லினியம் (கந்தஞ்சாவடி) ), CPT பகுதி, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர் மற்றும் அடையாறு பகுதி.

Guindy

கிண்டி: 

தொழிற்பேட்டை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் முழுவதும், காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை, ஜே.என். சாலை, அம்பாள் நகர், தொழிலாளர் காலனி ஆல் ஸ்ட்ரீட், பிள்ளையார் கோயில் 1 முதல் 5வது தெரு, ஏ, பி, சி & டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர் மற்றும் முனுசாமி தெரு அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!