இனி இவர்களுக்ளு நைட் ஷிப்ட் கிடையாது! குட்நியூஸ் சொன்ன காவல் ஆணையர் அருண்!

Published : Jan 26, 2025, 06:31 PM ISTUpdated : Jan 26, 2025, 06:35 PM IST

நீண்ட பணிகாலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணி மற்றும் கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

PREV
14
இனி இவர்களுக்ளு நைட் ஷிப்ட் கிடையாது! குட்நியூஸ் சொன்ன காவல் ஆணையர் அருண்!
இனி இவர்களுக்ளு நைட் ஷிப்ட் கிடையாது! குட்நியூஸ் சொன்ன காவல் ஆணையர் அருண்!

தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் காவல்துறையின் பங்கு அளப்பறியது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுபுறும் தமிழகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கூட கஞ்சா சர்வசாதாரணமாக கிடைத்து வருகிறது. இதனை உட்கொள்ளும் இளைஞர்கள் கொலை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். 

இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்கம் ரத்து அறிவித்த கையோடு மற்றொரு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!

24
Chennai Police

இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அவரவர் காவல் எல்லையில் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர சிறப்பு பாதுகாப்பு பணி, நுண்ணறிவு பணி, குற்றப்பிரிவு, புலன் விசாரணை, காவல் கட்டுப்பாட்டு பணி மற்றும் தொழிற்நுட்ப பணிகளில் காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தன் குடும்பத்தைக்கூட பெரிதாக கருதாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இரவு பகல் பாராமல் போலீசார் உழைக்கின்றனர். அரசு துறையில் இருந்தாலும் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் கூட விடுமுறை எடுக்காமல் பொதுமக்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை எப்போது முடிகிறது? மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

34
Chennai Commissioner Arun

இந்நிலையில் ஓய்வு பெறும் நிலையில், 59 வயது நிரம்பிய போலீசாருக்கு அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை இரவுப் பணியிலிருந்து விலக்களித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை பெருநகர காவல்துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய காவல் ஆளிநர்களின் வயது மூப்பையும், தங்களது நீண்ட பணிகாலத்தில்  அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய  மக்கள் பணியையும்  கடின உழைப்பையும்  கருத்தில் கொண்டு, 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்  வரையிலான அனைத்து  காவல் ஆளிநர்களுக்கும் இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

44
Night Shift

இந்த முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, வரும் காலங்களில் 59 வயதை எட்டும் காவல் ஆளிநர்கள் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஒரு வருட காலத்திற்கு, இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து காவல் அதிகாரிகளுக்கும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories