மேலும், அவர் தேர்தல் பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்டுகளுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.95 லட்சத்தை விட அவர் அதிகப்படியான தொகையை செலவிட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறவில்லை. எனவே, இந்த தொகுதியில் தயாநிதிமாறன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.